மணாலியில் உள்ள முக்கியமான ஆன்மீகத்தலங்களில் இந்த ஹடிம்பா கோயிலும் ஒன்றாகும். ஒரு குகைக்கோயிலான இது ஹடிம்பா எனப்படும் புராணிக அசுர அவதாரத்தின் சகோதரியான ஹடிம்பா தேவிக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இமயமலையின் அடிவார மலைகளில் அமைந்துள்ள இந்த குகைக்கோயில் செடார் மரக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1553ம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் இக்கோயில் மண்ணிலிருந்து வெளிநீண்டிருக்கு ஒரு பெரிய பாறையமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் உள்ளே காணப்படும் ஒரு பாறை ஹடிம்பா தேவியின் உருவமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி, இந்த கோயிலை கட்டுவித்த அரசன் இது போன்று மற்றொரு கோயில் உருவாககக்கூடாது என்பதற்காக இந்த கோயிலைக்கட்டிய கலைஞர்களின் வலது கையை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.
கோர் பூஜா எனப்படும் பூஜைச்சடங்கின்போது இக்கோயிலில் உள்ள தெய்வதத்தின் அருளை பெறுவதற்காக ஒரு குதிரை உருவத்தை வைத்து சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. ஹடிம்பா தேவியின் பிறந்த நாளாக கருதப்படும் மே 14ம் தேதியன்று ஏராளமான பக்தர்கள் இக்கோயிலில் கூடுகின்றனர்.



Click it and Unblock the Notifications