மணாலியிலிருந்து 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கொத்தி எனும் அழகிய கிராமம் கடல் மட்டத்திலிருந்து 2500மீ உயரத்தில் உள்ளது. கொத்தி கார்ஜ் எனப்படும் மலைப்பாதாளத்திற்கு இக்கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது.
பயங்கர ஆழத்துடன் காட்சியளிக்கும் இந்த மலைப்பாதாளம் மற்றும் பியாஸ் ஆறு போன்றவற்றை இக்கிராமத்தில் பார்த்து ரசிக்கலாம். சாலையிலிருந்து ஒரு மணி நேர மலையேற்றம் செய்து இந்த கிராமத்தை அடையலாம்.
பாறைகளினூடே பல வெந்நீர் ஊற்றுகளும் வழிவது இப்பகுதியின் மற்றொரு விசேஷமான அம்சமாகும். கொத்தி கார்ஜ் ஸ்தலமானது பாராகிளைடிங் பறப்புக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.
மே மாதம் அக்டோபர் வரையிலான மாதங்கள் இந்த கிராமத்துக்கு விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன. கொத்திக்கு விஜயம் செய்யும்போதே அருகிலுள்ள சோலங் பள்ளத்தாக்கு பகுதிக்கும் செல்லலாம்.



Click it and Unblock the Notifications