மவுண்டெய்ன் பைக்கிங் அல்லது மலை சைக்கிள் சவாரி எனப்படும் பொழுதுபோக்கு அம்சமும் மணாலி சுற்றுலாத்தலத்தில் பிரசித்தி பெற்றுள்ளது. லாஹௌல், ஸ்பிட்டி, ரோஹ்தங் பாஸ் மற்றும் லடாக் போன்றவை இந்த பொழுதுபோக்கிற்கு ஏற்ற இடங்களாக அமைந்துள்ளன.
ஜுன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் சாலைகள் பனி உறைவில்லாமல் காணப்படுவதால் இம்மாதங்கள் மவுண்டெய்ன் பைக்கிங் செல்ல உகந்தவையாக உள்ளன.
இந்த பொழுதுபோக்கில் ஈடுபட விரும்பும் பயணிகளுக்காக வாடகை சைக்கிள்கள் உள்ளூர் கடைகளில் தரப்படுகின்றன. இவற்றுக்கான வாடகை 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை இருக்கலாம்.
ஹிமாலயன் எக்ஸ்ட்ரீம் சென்டர் போன்ற தனியார் சுற்றுலா சேவையாளர்கள் குழுப்பயணங்களையும் ஏற்பாடு செய்கின்றனர். இந்த சைக்கிள் சவாரியில் ஈடுபட விரும்பும் பயணிகள் முதலுதவி பெட்டி, காற்று பம்ப், உபரி ட்யூப் போன்றவற்றை சொந்த முயற்சியில் கொன்டு செல்வது நல்லது.



Click it and Unblock the Notifications