பாலஹ் வாலி அல்லது சுந்தர் நகர் வாலி என்று அழைக்கப்படும் இந்த பள்ளத்தாக்குப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 800 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லா ரிட்ஜ் மற்றும் ஷிவாலிக் மலைகளுக்கு இடையே உள்ள இந்த பள்ளத்தாக்குப்பகுதியில் சுகேதி எனும் புகழ் பெற்ற நீரோடை ஓடுகிறது.
சோளம், கோதுமை, இஞ்சி மற்றும் கரும்பு போன்ற பயிர்கள் இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் இங்குள்ள மக்கள் பால்பண்ணை, கலப்பு விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மலர்த்தாவர பண்ணை போன்ற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications