துர்க்கையம்மனின் அவதாரமான காமாக்ஷா தேவிக்காக இந்த காமாக்ஷா தேவி கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான ஆலயம் மண்டி மாவட்டத்தில் காவ் எனும் கிராமத்தில் உள்ளது.
புராணக்கதைகளின்படி, மகிஷாசுரன் எனும் அசுரனை இந்த இடத்தில் காமாக்ஷா தேவி வதம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நவராத்திரியின் போதும் இந்த கோயிலில் எருமைகள் பலி கொடுக்கப்படுகின்றன.
இந்த கோயில் பாரம்பரிய பகோடா கோயில் பாணியிலான வடிவமைப்பு, அழகிய ஓவியங்கள் மற்றும் மரக்குடைவு அலங்காரங்கள் போன்றவற்றுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. கர்சோக் எனும் இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு சுலபமாக பயணம் மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications