குண்ட் பாக்யோக் லேக் எனும் இந்த அழகிய ஏரி கடல் மட்டத்திலிருந்து 1700 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ரேவல்சர் நகரத்தில் உள்ள இந்த ஏரியானது ரேவல்சர் ஏரி மற்றும் மடாலயத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
சுற்றிலும் உயரமான மலைகள் சூழ்ந்து காணப்படும் இந்த ஏரியின் ஆழம் 12மீ முதல் 15மீ வரை உள்ளது. ஏரிக்கு அருகிலேயே உள்ள சிறிய வனவிலங்கு காட்சிக்கூடம் ஒன்றும் பயணிகளால் விஜயம் செய்யப்படுகிறது.
இந்த ஏரியானது ஏனைய ஆறு ஏரிகளுடன் சேர்த்து மஹாபாரத காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புராணக்கதைகளின்படி பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பிச்செல்லும்போது இந்த ஏரிகளை கடந்து சென்றதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications