தார்ணா மலைகளில் அமைந்துள்ள இந்த ராணி அம்ரித் கௌர் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக மண்டியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. 1957ம் ஆண்டு தலாய் லாமாவால் இந்த பூங்கா திறக்கப்பட்டிருக்கிறது.
15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தார்ணா தேவி கோயில் நகரி பாணி கட்டிடக்கலை அம்சத்துடன் காட்சியளிக்கிறது. பூங்காவிற்கு அருகிலேயே உள்ள இந்த கோயில் ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications