ஹிமாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி-பதான்கோட் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த த்ரிலோக்நாத் கோயில் மண்டி பகுதியின் பழமையான கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது.
அஜ்பேர் சேன் மன்னரின் ராணியான சுல்தான் தேவியால் 1520ம் ஆண்டில் இது கட்டப்பட்டிருக்கிறது. அழிவுச்சக்திக்கான தெய்வமான சிவபெருமானுக்காக இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
த்ரிலோக்நாத் கோயில் கருவறையில் மூன்று முகம் கொண்ட சிவன் காட்சியளிக்கின்றார். மேலும் மற்ற ஹிந்து கடவுள் சிலைகள், நாரதர் மற்றும் சாரதா ஆகியோர் சிலைகளையும் இக்கோயிலில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications