மணிகரன் நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த கிர்கங்கா புகழ் பெற்றுள்ளது. இங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில் வெளிப்படும் நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஊற்றுகளில் வரும் நீர் வெண்ணிறத்தில் காணப்படுவதால் இந்த இடத்துக்கு கிர்கங்கா எனும் பெயர் வந்துள்ளது. கந்தகம் கலந்திருப்பதால் வெண்ணிற நுரையுடன் நீர் இந்த வெந்நீர் ஊற்றுகளில் வெளிப்படுகிறது.
மண்டலை எனும் மற்றொரு இயற்கை எழில் நிரம்பிய சுற்றுலா ஸ்தலம் கிர்கங்கா பகுதியிலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பயணிகள் இந்த இடத்துக்கும் விஜயம் செய்து மகிழலாம்.
பார்வதி ஆறு மற்றும் பனி படர்ந்த வெண் மலைகளின் அழகை பார்க்க உதவும் புல்கா எனப்படும் மலைக்காட்சி ஸ்தலமும் ஒரு மலையேற்றப்பாதையின் மூலமாக இந்த கிர்கங்கா பகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications