Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணிகரன் » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா

ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா, மணிகரன்

17

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மணிகரன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாரா அமைந்துள்ளது. கியானி கியான் சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ள குறிப்புகளின்படி இந்த குருத்வாரா ஸ்தலத்துக்கு குரு நானக் தேவ் தனது ஐந்து சீடர்களுடன் விஜயம் செய்து அருளியதாக சொல்லப்படுகிறது.

இந்த ஸ்தலத்தில் குரு நானக் தனது சீடரான பாய் மர்டானாவை அழைத்து மணிகரன் மக்களிடமிருந்து தானியம் மற்றும் மாவு போன்றவற்றை லங்கார் எனப்படும் அன்னதான சடங்கிற்காக பெற்று வருமாறு பணித்தார்.

பின்னர் குரு நானக் அவர் அமர்ந்திருந்த இடத்துக்கருகில் இருந்த ஒரு கல்லை எடுக்குமாறு சொன்னார். அப்படி செய்தபின் அந்த இடத்திலிருந்து ஒரு வெந்நீர் ஊற்று பீய்ச்சியடித்தது.

இன்றும் காணப்படும் அந்த வெந்நீர் ஊற்றின் நீரிலிருந்தே அன்னதான உணவு தயாரிக்கப்படுகிறது. மணிகரன் நகருக்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் இந்த ஊற்றின் நீரை புனித தீர்த்தமாக கருதி அருந்தவும் நீராடவும் செய்கின்றனர். இந்த ஊற்றில் குளிப்பது மோட்சத்தை தரும் என்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

மஹாபாரத காவியத்தை இயற்றிய மஹரிஷி வேத வியாசர் தனது பவிஷ்ய புராணத்தில் குரு நானக்கின் விஜயம் மற்றும் 11 சீக்கிய குருக்களில் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் தனது ஐந்து சீடர்களுடன் விஜயம் செய்தது போன்ற சம்பவங்களை முன்கூட்டியே யூகித்து எழுதியுள்ளார்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri