ஹிமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள விஷ்ணு குண்ட் எனும் இடத்தில் அமைந்துள்ள குலந்த் பீட் நாட்டிலுள்ள உயர்ந்த ஆன்மீக பீடங்களில் ஒன்றாக கீர்த்தி பெற்றுள்ளது. நாட்டுப்புற கதைகளின்படி, அழிக்கும் கடவுளான சிவன் இந்த ஸ்தலத்தில் வசித்ததாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக இந்த புனித ஸ்தலம் ஏராளமான யாத்ரீகர்களை ஈர்க்கிறது.
இந்த பீடத்தில் புனித தீர்த்தக்குளம் ஒன்றும் அமைந்துள்ளது. இதில் நீராடினால் மோட்சம் கிட்டும் என்பதாக பக்தர்களிடையே ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
தேவகுல வைணவ ரிஷியாகிய நாரதர் இங்குள்ள சிவனின் பார்வை பட்டால் பக்தர்கள் தங்கள் கோபம் மற்றும் துர்க்குணங்களிலிருந்து விடுபடுவார்கள் என்று அருளியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இங்குள்ள வெந்நீர் ஊற்றில் சமைத்த உணவை உண்பவர்களுக்கு காக்கும் கடவுளான விஷ்ணு உறையும் வைகுண்டத்தில் இடம் கிட்டும் என்றும் ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன.



Click it and Unblock the Notifications