மந்த்ராலயம் கிராமத்தின் முக்கியமான சுற்றுலா பகுதியாக ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயில் திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சமாதியான பிருந்தாவனத்தை சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் விஷ்ணுவின் தீவிர பக்தனான பக்த பிரகலாதனின் மறுபிறவி என்று சொல்லப்படுகிறது.
மேலும் ராகவேந்திர சுவாமிகள் தனக்கு தானே சமாதி கட்டிக் கொண்டதுடன், அந்த சமாதியான பிருந்தாவனத்துக்குள் சென்ற பிறகு தான் 700 ஆண்டுகள் அதனுள்ளேயே வாழ்வேன் என்று தன் பக்தர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி 339 ஆண்டுகள் கழித்துவிட்ட நிலையில், மேலும் 361 ஆண்டுகள் ராகவேந்திரர் அதில் வாழ்வார் என்று பக்தர்கள் நம்பி வருகின்றனர்.
ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் குரு ஜெயந்தி திருவிழா ராகவேந்திரரின் பக்தர்களால் வெகு கோலாகலமாக கொண்டாப்படும். அப்போது நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மந்த்ராலயம் நகருக்கு படையெடுத்து வருவது போல் வருவார்கள்.



Click it and Unblock the Notifications