சிவாஜி ஏணிப்படிகள் என்று விசேஷமாக பெயரிடப்பட்டுள்ள இந்த இடம் மாத்தேரான் பகுதியில் அவசியம் காணவேண்டிய ஒரு ஸ்தலமாகும். இது ‘ஒன் ட்ரீ பாயிண்ட்’ மற்றும் ‘மாத்தேரான் பள்ளத்தாக்கு’ பகுதியை ஒரு ஏணிப்படிகள் போன்ற மலைப்பாதையின் மூலமாக இணைக்கிறது.
சிவாஜி மஹாராஜ் இந்த ஏணிப்படி பாதையை வேட்டை மற்றும் இயற்கைப்பயணத்துக்கு பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. அதனாலேயே இப்பெயர் வந்துள்ளது. மாத்தேரான் பகுதி முழுக்கவே இயற்கை எழில் வழியும் இடம் என்பதால் இந்த ஸ்தலமும் இயற்கை வனப்புடன் உள்ளது என்பதை குறிப்பிடத்தேவையில்லை.
மலையேற்றத்தை விரும்புபவர்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கக்கூடும். சுற்றிலும் பசுமையான வனப்பகுதி மற்றும் நீர்வீழ்ச்சிகளுடன் இந்தப்பகுதி காட்சியளிக்கிறது.கரடுமுரடான மலைப்பாதைகள் என்பதால் சாகசவிரும்பிகளுக்கும் மலையேறிகளுக்கும் இந்த இடம் ரொம்பவே பிடிக்கும்.



Click it and Unblock the Notifications