வட இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயமாக மீரட் நகரத்தின் செயின்ட் ஜான் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது.
மீரட்டில் பணி செய்து கொண்டிருந்த ஆங்கிலேய வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆன்மீக வழிபாட்டிற்காகவே இந்த தேவாலயம் ஆங்கிலேயர்களால் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த தேவாலயத்தைச் சுற்றிலும், பழங்கால பாணியில் மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் புல்வெளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக வந்து செல்லும் இந்த தேவாலயத்தில், ஞாயிற்றுக் கிழமைகளில் மாபெரும் பிரார்த்தனைக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.



Click it and Unblock the Notifications