மோகோக்சங் நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய பிரபலமான பூங்காவாக நகர பூங்கா என்றழைக்கப்படும் மோகோக்சங் பூங்கா விளங்கி வருகிறது. இயற்கையோடு இணைந்திருக்கவும், ஓய்வெடுக்கவும் மிகவும் ஏற்ற பூங்காவாக இது உள்ளது.
நகரின் மையத்தில் அமைந்திருக்கும் இந்த பூங்கா உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளையும் கவருவதாக உள்ளது. இந்த பூங்காவிலிருக்கும் 'வியூ பாயிண்ட்' பகுதியில் தெரியும் பறவைக் காட்சி வெள்ளை கேன்வாஸில் வரையப்பட்ட பசுமையான ஓவியம் போல மோகோக்சங் நகரை காட்டும் வல்லமை பெற்ற இடமாகும்.
இந்த பூங்காவில் ஒரு கால்பந்து மைதானமும் மற்றும் கண்காணிப்பு கோபுரமும் உள்ளன. பிற வடகிழக்கு மாநிலங்களைப் போலவே கால்பந்து விளையாட்டு பிரபலமாக உள்ள இந்த மாவட்டத்தில், திறமையான வீரர்கள் தங்கள் திறமைகளை காட்டுவதை காண முடியும்.
இங்கு மனதை மயக்கும் வகையில் பூத்துக் கிடக்கும் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் ஆர்கிட் மலர்களை காண்பதற்கு வசந்த காலம் தான் சிறந்த பருவமாகும். மேலும், இங்கே உள்ளூர் பறவைகளையும் காண முடியும்.



Click it and Unblock the Notifications