ராம்பூர் ரயில் கிராஸிங் அருகே அமைந்திருக்கும் இந்த பிரேம் ஒண்டர்லேண்ட் மற்றும் பிரேம் வாட்டர் கிங்டம் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்கு பூங்காவாகும்.
இங்கு பல்வேறு நீர் விளையாட்டு அமைப்புகள் மற்றும் இதர இயந்திர சவாரி அமைப்புகள் எல்லா வயதினருக்கும் ஏற்றாற்போல அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதியிலுள்ள மக்கள் ஆனந்தமாக பொழுதுபோக்குவதற்கு இந்த பூங்காவிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஏற்ற பல்வேரு பொழுதுபோக்கு அம்சங்களை இந்தபூங்கா கொண்டுள்ளது. வாட்டர் பலூன் ஃபைட்டிங் என்பது இங்குள்ள ஒரு நீர் விளையாட்டு அம்சமாகும். கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு திறந்தவெளி அரங்கமும் இங்குள்ளது. யானைச்சவாரி போன்ற அம்சங்களும் இங்குள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களில் இந்த பிரேம் ஒண்டர்லேண்ட் மற்றும் பிரேம் வாட்டர் கிங்டம் மிகப்பெரிய பூங்காவாக பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications