ராம்பூர் எனும் இடத்தில் உள்ள இந்த ரஜா லைப்ரரி நவாப் ஃபைசுல்லா கான் என்பவரால் 1774ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. அவர் தன் வாழ்நாளில் சேகரித்து புத்தகங்களையும் தனது முன்னோர்கள் நவாப் தோஷக்கானா எனும் நூலகத்தில் வைத்திருந்தவற்றையும் இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்தோ இஸ்லாமிய பாரம்பரிய தொடர்பான பல நூல்கள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலேயர் காலத்திலேயே ராம்பூர் ஒரு தனி சம்ஸ்தானமாக விளங்கியதால் நவாப் மன்னர்கள் இந்த நூலகத்தை நல்ல முறையில் பராமரித்து ஆதரித்து வந்துள்ளனர்.
வரலாற்று குறிப்புகள், பிரதிகள், ஞாபகார்த்த பொருட்கள், ஓவியப்பிரதிகள், முகலாயர்கால குறு ஓவியங்கள் , பாரசிக மற்றும் அரபி மொழியில் அமைந்து ஓவியக்குறிப்புகள், இஸ்லாமிய சித்திர எழுத்துக்கள் மற்றும் வானவியல் கருவிகள் போன்றவை இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஹிந்தி, சம்ஸ்கிருதம், உருது, தமிழ், துருக்கி மற்றும் பஷ்டோ இலக்கிய நூல்கள் போன்ற அரிய பழமையான நூல்கள் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் புனித குரானின் முதல் மொழிபெயர்ப்பு பிரதி மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது.
மொத்தத்தில் பல்வேறு மொழிகளில் 30000 நூல்கள் மற்றும் சஞ்சிகைகள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நூலகம் தற்போது இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.



Click it and Unblock the Notifications