மோரிக்கு வரும் சுற்றுலாபயணிகளின் விருப்பமான செயலாக முகாமிடுதல் உள்ளது. டான்ஸ் நதிக்கரையில், அடர்ந்த பசுமையான காடுகளுடன் அமைந்துள்ள இந்த இடம் முகாம் அமைத்து தங்குவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.
இங்குள்ள சில விடுதிகளில் முகாம் அமைப்பதற்கு தேவையான வசதிகள் நியாயமான விலைகளில் செய்து தரப்படுகின்றன. போன்பையர் மற்றும் திறந்தவெளி விருந்துகளுடன் இந்த பகுதியின் ஜில்லென்ற இரவுகளை முகாம்களில் கழித்திட முடியும்.
முகாமிடுதல் மட்டுமல்லாமல், இங்கிருக்கும் தனித்தன்மையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பார்வையிடுவதற்கும் மோரி ஏற்ற இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications