ஆரவல்லி மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள குரு ஷிக்கார் பீக் என்றழைக்கப்படும் இந்த உயரமான சிகரம் மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலேயே உள்ளது.
இது கடல் மட்டத்திலிருந்து 1722 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. பயணிகள் அதிக அளவில் மலையேற்றத்தில் ஈடுபடும் ஸ்தலமாக இது பிரசித்தி பெற்றுள்ளது. இந்த சிகரத்தின் உச்சியிலிருந்து ஆரவல்லி மலைத்தொடரின் முழு அழகையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
குரு தத்தாத்ரேயா கோயில் எனும் பழமையான கோயில் ஒன்றும் இந்த சிகரத்தின் உச்சியில் அமைந்துள்ளது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுள்களின் அவதாரமாக கருதப்படும் குரு தத்தாத்ரேயா’வுக்காக இந்தக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
இது தவிர, சிவன் கோயில், மீரா கோயில் மற்றும் சாமுண்டி கோயில் ஆகியனவும் இந்த மலையில் அமைந்துள்ளன. மேலும் ஒரு முக்கிய சிறப்பம்சமாக, இங்கு ‘மௌண்ட் அபு வானியல் ஆராய்ச்சி மையம்’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. PRL எனப்படும் ‘பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி’ நிறுவனத்தால் இந்த வானியல் ஆய்வு மையம் நிர்வகிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications