முக்தேஸ்வர் பகுதியில் நதுவக்கான் என்ற ஒரு அழகிய குக்கிராமம் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் முக்தேஸ்வரிலிருந்து 14 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1940 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
நதுவா கான் என்ற இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரால் இந்த கிராமம் நதுவக்கான் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறிய கிராமம் டலண்டா, நேவடா, மலட்டண்டா, கவோன், கஃபால்தரி, கனலா, ஜோப்ரோ, பனோலா, புங்கா, பகீசா, லமக்கான் மற்றும் டபுக் என்று பல சிறுசிறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்திலிருந்து மனதை கொள்ளை கொள்ளும் இமயமலையின் இயற்கை அழகை அள்ளிப் பருகலாம். இந்த பகுதியில் இருக்கும் ஓக், பைன், பிர்ச் மற்றும் கபால் மரங்கள் இந்த கிராமத்தை மேலும் மேலும் அழகுபடுத்துகின்றன.
இங்குள்ள பாப் பேலஸ் என்ற பயணிகள் விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி மகிழலாம். அதுபோல் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே இந்தப் பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளலாம் மற்றும் பனிச்சறுக்கும் செய்யலாம்.



Click it and Unblock the Notifications