இந்தியாவின் மிகச் சிறந்த மால்களை நீங்கள் பார்க்க விரும்பினால் மும்பை மாநகரத்துக்குத்தான் வர வேண்டும். இந்த நகரத்தில் நீங்கள் விரும்பும் பொருட்களை சிறந்த தரத்துடன் மலிவான விலைகளில் வாங்க முடியும்.
குறிப்பாக ஃபீனிக்ஸ் பகுதியிலுள்ள பல்லேடியம் மால், இன் ஆர்பிட் மற்றும் வாஷி மால்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மால்கள். இங்கு எலக்டிரானிக் பொருட்கள், ஆடைகள், விளையாட்டு பொருட்கள் என்று எதுவானாலும் உலகத் தரத்தில் கிடைக்கும்.
அதிலும் மற்ற நகரங்களை போல் அல்லாமல் மும்பை நகர மால்களில் பெரும்பாலும் தள்ளுபடி விலைகளில் அனைத்து பொருட்களையும் வாங்கலாம். அதோடு பல்லேடியம் மாலில் தினமும் மாலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.



Click it and Unblock the Notifications