மவுண்ட் மேரி தேவாலயம் என்று பிரபலமாக அறியப்படும் 'பெஸிலிக்கா ஆஃப் அவர் லேடி ஆஃப் தி மவுண்ட்' கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில், அரபிக் கடலின் அற்புதத் தோற்றத்தை நமக்களித்துக் கொண்டு நிற்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், மேரி மாதா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த தேவாலயம் மும்பையின் நவநாகரிக இடங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதோடு, பேண்ட்ஸ்டாண்ட் மற்றும் கார்டர் ரோடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் அருகாமையில் உள்ளது. இதன் தனிச் சிறப்பு வாய்ந்த கட்டிடக் கலைக்கு எந்த களங்கமும் வராமல் சீரிய முறையில் இது பாதுகாக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.



Click it and Unblock the Notifications