கராக்பூர் பகுதியில் அமைந்துள்ள உச்சேஷ்வர்நாத் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டதாகும். மிக விசேஷமானவையாகக் கொண்டாடப்படும் சிவபெருமானின் வழிபாட்டு ஸ்தலங்களுள் இக்கோயில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
இங்கு வசித்து வரும் சாந்தல் மலை ஜாதி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கான ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் ஒரு பொது கண்காட்சி இக்கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு, ஏற்ற மணமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், இங்கு வைத்து அவர்களின் பாரம்பரியமான முறையில் மணம் முடித்து வைக்கப்படுவதனால் இந்த இனத்தவரின் வாழ்வில் இக்கோயில் மிக முக்கியமானதொரு இடமாகத் திகழ்கின்றது.



Click it and Unblock the Notifications