மூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான ஒன்றாகும். சீதா தேவி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்விழ்ச்சி தேவிகுளம் பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கவும், பிக்னிக் சிற்றுலா செல்வதற்கும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் மிகவும் ஏற்றதாக உள்ளது. அன்றாட வாழ்க்கையின் சந்தடியிலிருந்து விலகி பயணிகள் இந்த இடத்தின் அமைதி நிரம்பிய இயற்கைச்சூழலில் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளலாம்.
இடுக்கி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் கிராமம் இங்குள்ள நீர் மின்னுற்பத்தி நிலையத்துக்காக நாடு முழுதும் அறிந்த இடமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. மூணாரிலிருந்து எளிதில் செல்லும்படியாக அமைந்துள்ள இந்த கிராமத்தை சுற்றிலும் காணப்படும் இதர சுற்றுலா அம்சங்களையும் பார்த்து ரசிக்கலாம். பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி, சீதாதேவி கோயில் இரண்டுக்குமே விஜயம் செய்யும்படியாக பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை வைத்துக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications