மஹாராஷ்டிர மாநிலத்தின் பிரசித்தமான கடற்கரைகளுள் இந்த முருட் கடற்கரையும் ஒன்று. முருட் ஜஞ்சிராவில் அமைந்துள்ள இது 1.75 கி.மீ நீளத்துக்கு காணப்படுகிறது.
இது பார்ப்பதற்கு ஒரு ஆபரணத்தைப்போன்றே காட்சியளிக்கின்றது. வெள்ளை மணலுடனும் ஸ்படிகம் போன்று தெளிந்த நீருடனும் காட்சியளிக்கும் இந்த கடற்கரை சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் மிக பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது.இங்கு சீதோஷ்ணநிலை எப்போதும் இனிமையானதாகவும் இதமாக வீசும் காற்றுடனும் உள்ளது. இது பயணிகளுக்கு சாந்தத்தை தரும் வகையில் உள்ளது. ஏகாந்தமாக சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிக்க இது மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.
இந்த கடற்கரைக்கு வந்து திரும்பும் பயணிகள் மறக்கவே முடியாத ஒரு பரவசத்துடன் திரும்புவார்கள் என்பது ஒரு நிச்சயமான உண்மையாகும்.



Click it and Unblock the Notifications