சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் 1979 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ரயில் மியூசியம் ஆகும். இங்குள்ள சாமுண்டி கேலரியில் சுற்றுலா பயணிகள் ரயில்வே துறையின் துவக்கத்தையும், வளர்ச்சியையும், திட்டங்களின் வரலாற்றையும் காணலாம்.
ஸ்ரீ ரங்கா மர்கீ எனும் இடத்தில் மைசூர் மஹாராஜா பயன்படுத்திய ரயில் கோச்சுகளையும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீராவி இன்ஜினையும் பார்க்கலாம். குழந்தைகள் பிரயாணம் செய்து மகிழும்படி ஒரு குட்டி ரயிலும் இந்த மியூசியத்துக்கு உள்ளேயே இயக்கப்படுகிறது.
மிக குறைந்த கட்டணம் செலுத்தி இந்த மியூசியத்தை சுற்றுலாப்பயணிகள் வாரத்தின் எல்லா நாட்களிலும், திங்கள் கிழமை தவிர்த்து, காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை, அதன் பின்னர் மதியம் 3 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பார்த்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications