நாகௌர் நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சம் இந்த நாகௌர் கோட்டையாகும். இந்த மணற்கோட்டை 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. தன் வாழ்நாளில் எண்ணற்ற போர்களையும் இது சந்தித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சமதளபூமியில் உள்ள கோட்டைகளில் இது மிகப்பிரசித்தமான கோட்டையாக விளங்குகிறது. உயரமான கோட்டைச்சுவர்கள் மற்றும் பிரம்மாண்டமான உள் வளாகம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். அரண்மனைகள், நீரூற்றுகள், கோயில்கள் மற்றும் நந்தவனங்கள் என்று பல அம்சங்கள் இந்த கோட்டைக்குள் நிறைந்துள்ளன.
நாஹவன்ஷி வம்சத்தாரால் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை பின்னாளில் முஹம்மத் பஹ்லீம் என்பவரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டைக்கு மூன்று வாயில்கள் உள்ளன. முதல் வாசலில் இரும்பு மற்றும் மரத்தாலான ஈட்டிகள் செருகப்பட்டுள்ளன.
யானைகள் கோட்டைக்கதவை மோதி உடைக்காமலிருக்க இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வாசல் ‘பீச் கா போல்’ என்றும் மூன்றாவது வாசல் ‘கச்சேரி போல்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்றாவது வாசல் அக்காலத்தில் ராஜ நியாயஸ்தலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications