நக்கர் கோட்டை எனப்படும் இந்த பழமையான கோட்டை 500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்கிறது. இது மணாலியிலிருந்து 21கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. புராதனகால கோட்டையான இது குல்லு ராஜாவான சித் சிங் என்பவரால் 1460ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
ஒருகாலத்தில் ராஜ வம்சத்தினரின் இருப்பிடமாக திகழ்ந்த இந்த கோட்டை மாளிகை 1978ம் ஆண்டில் ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டது. கற்கள் மற்றும் மர அமைப்புகளைக்கொண்டதாக இந்த கோட்டை காட்சியளிக்கிறது.
பியாஸ் ஆற்றுக்கு அருகே 5400 அடி பரப்பளவில் காணப்படும் இந்த கோட்டையிலிருந்து ஆற்றுப்பகுதியின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம். நிக்கோலாஸ் ரியோரிச் எனும் பிரசித்தமான ரஷிய ஓவியரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிக்கோலாஸ் ரியோரிச் ஆர்ட் காலரியும் இந்த கோட்டை வளாகத்திலேயே உள்ளது.
‘ஜப் வி மெட்’ எனும் பிரபல பாலிவுட் ஹிந்திபடத்தில் வரும் பாடல் காட்சி ஒன்று இந்த அழகிய கோட்டையின் பின்னணியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications