கில்பரி, நைனித்தால்

கில்பரி எனும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. ஓய்வாக விடுமுறையை கழிப்பதற்கு மிகவும் பொருத்தமான இந்த இடம் வளமான ஓக்,  பைன் மரங்கள் மற்றும் ரோடோடென்ரோன் காடுகளால் சூழப்பட்டிருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 2194 மீ உயரத்தில் இந்த இடம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பயணிகள் இங்கிருந்து சுற்றிலும் எழும்பி நிற்கும் படர்ந்த சிகரங்களின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

கில்பரி ஸ்தலத்தில் 580 வகையான பறவை இனங்கள் வசிக்கின்றன என்பதால் இவற்றையும் பயணிகள் ரசித்து மகிழலாம். பிரவுன் வுட் ஆந்தை, காலர்ட் க்ராஸ்பீக் பறவை மற்றும் சிரிக்கும் குயில் போன்ற அபூர்வ பறவைகளை இப்பகுதியில் பயணிகள் காணலாம். மேலும் இங்குள்ள ஒரு காட்டு பங்களாவில் ஓய்வெடுக்கவும் வசதி உள்ளது.

Please Wait while comments are loading...