நைனித்தால் ரோப்வே எனப்படும் இந்த கயிற்றுக்கார் போக்குவரத்து சேவை ஒரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். இது குமாவூங் மண்டல் விகாஸ் நிகாம் எனும் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
ஆகாய மார்க்கமாக அந்தரத்தில் தொங்கும் கயறுகளில் இயக்கப்படும் இவ்வகை தொங்கு ஊர்தி சேவை இந்தியாவிலேயே இங்குதான் முதன் முதலாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தரையிலிருந்து 300 மீ உயரத்தில் 705 மீ தூரத்தை கடக்கும் விதத்தில் இந்த கயிற்றுக்கார் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு கயிற்று கார் வாகனத்திலும் 12 பேர் (825 கிலோ) பயணிக்க முடியும். இந்த கயிற்றுக்கார் போக்குவரத்து சேவை ஸ்னோ வியூ சுற்றுலாத்தலம் மற்றும் நைனித்தால் நகரை இணைக்கிறது.
ஒரு நொடிக்கு 6 மீ வேகத்தில் நகரும் இந்த கயிற்றுக்கார்களில் பயணித்தபடி சுற்றிலும் காணக்கிடைக்கும் மலை எழிற்காட்சிகளையும் கண்களால் அள்ளிப்பருக முடிவது ஒரு கூடுதல் விசேஷம்.



Click it and Unblock the Notifications