போட் ஹவுஸ் கிளப் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பழமையான கிளப் எனும் பெருமையை பெற்றுள்ளது. 1890ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கிளப் நைனி ஏரியின் வடக்கு விளிம்பில் அமைந்துள்ளது.
இங்கு உறுப்பினர் அனுமதி சமூகத்தின் மேற்குடியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏரியில் சொகுசுப்படகு இயக்கும் பிரத்யேக பொறுப்பும் இந்த கிளப் வசம் உள்ளது
இந்த கிளப்பில் உல்லாசமாக பொழுது போக்க பார்கள், பில்லியர்ட்ஸ் கூடங்கள் ஆகியவை உள்ளன. தற்காலிக உறுப்பினர் அனுமதி பெறுவதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் இந்த கிளப்பின் வசதிகளை அனுபவிக்கலாம்.
ஜூன் மாதத்தின் போது ஒரு சொகுசுப்படகு திருவிழா கொண்டாட்டமும் இந்த கிளப் மூலம் நைனி ஏரியில் நடத்தப்படுகிறது. இங்கிலாந்தில் படகுத்திருவிழா நடக்கும் அதே சமயம் இங்கும் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications