ஹிர்னய் பர்வத், பாலா ஆட்சிக்காலத்தின் போது ஓடந்தாபுரி அல்லது ஓடந்தாபுரா அல்லது உட்டந்தாபுரா என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
பாலா மன்னரான தர்மபாலாவினால் 8-வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஹிர்னய் பர்வத், பஞ்சனான் நதிக்கரையோரத்தில் புத்த விகாரம் மற்றும் பூங்காவாக செயல்பட்டு வந்துள்ளது.
தற்போது இது நாலந்தா மாவட்டத்தின் தலைமையகமாக விளங்கும் பீஹார் ஷரீஃப் நகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. நாலந்தா சிதிலங்களிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஹிர்னய் பர்வத், உள்ளூர்வசிகளிடையே பாரி பஹாரி என்று பிரபலமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications