"தேமி தேயிலை" உலகம் முழுவதும் தேநீர் விரும்பிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சிக்கீமில் உள்ள ஒரே டீ தயாரிக்கும் இடமும் இதுதான். இது உலகின் சிறந்த தேயிலைத் தோட்டங்களுள் ஒன்றாகும்.
தேமி தேயிலைத் தோட்டம் சிக்கிம் அரசால் 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு தரமான தேயிலை உற்பத்தியை காணலாம். சிறந்த முதல் ரக தேயிலை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றில் “சிக்கிம் சொல்ஜா” “மிஸ்டிக்" மற்றும் "கஞ்சன்ஜங்கா” போன்ற தேயிலைகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
பாரம்பரிய தேயிலை தயாரிப்பை போன்று இல்லாமல் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் இத்தோட்டம் 'வேளாண் தோட்டம்' என்றும் அழைக்கப்படுகின்றது. தற்பொழுது இந்த தோட்டத்திலிருந்து “வேளான் டீ” ஒரு சில இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
தேமி தேயிலை தற்பொழுது கொல்கத்தாவின் தேயிலை ஏலத்தில் அதிகபட்ச விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் டீ விரும்பியாக இருந்தால் கண்டிப்பாக இங்கு செல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications