முகாலய மன்னர் ஷாஜஹானின் திவானாக விளங்கிய ராய் பல் முகுந்த் தாஸ் என்பவரால் கட்டப்பட்ட சட்டா ராய் பல் முகுந்த் தாஸ் மிகப்பெரிய அரண்மனை ஆகும். ஐந்து மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் ஏராளமான அறைகளும், தூண்களும் உள்ளன.
மேலும் நீரூற்றுகளும், ஊற்றுகளும் கோடை காலத்தை குளிர்விக்கும் வண்ணம் அமைந்துள்ளன. பெரிசிய சக்கர முறையைப் பயன்படுத்தி தொட்டிகளில் நீர் நிரப்பும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டது.
பாதாள அறைகள் இருந்த இந்த அரண்மனையில் சூரிய ஒளி மூன்று அடுக்குகளாக பாயும் வண்ணம் அறைகள் கட்டப்பட்டிருந்தன.டெல்லி, ஜெய்ப்பூர், மஹேந்திரகார்ஹ் ஆகிய நகரங்களுக்கு செல்லும் வண்ணம் பாதாள வழிகளும் இருந்தன. இப்போது அவற்றில் ஒன்று மட்டுமே மிச்சமுள்ளது.



Click it and Unblock the Notifications