நாசிக் நகரத்தின் அடையாளம் இந்த கும்ப மேளா நிகழ்வு தான் என்றால் அது கண்டிப்பாக மிகையில்லை. பிரமாண்டமான ஒரு மதச்சடங்காக நடைபெறும் இந்த மிகப் பிரசித்தி பெற்ற நிகழ்வு பெருங்கூட்டம் கூடும் ஒரு மாபெரும் சடங்குத் திருவிழாவாகும்.
நாசிக்கில் உள்ள அரசு சுற்றுலாத்துறை மையம் இந்த பெருவிழாவை பல விதங்களிலும் விளம்பரப்படுத்தி பரப்புவதால் இந்த திருவிழா ஒரு பெரும் கவர்ச்சி அம்சமாக மாறியிருக்கிறது.
ஓவ்வொரு பனிரெண்டு ஆண்டுகளிலும் மூன்று முறை இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. உஜ்ஜைனி, அலஹாபாத், மற்றும் ஹரித்வார் போன்ற இடங்களிலும் கும்ப மேளா கொண்டாடப்படுவது குறிப்பிடத் தக்கது. அச்சமயம் நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகின்றனர்.
இருப்பினும் அலஹாபாத் கும்ப மேளாவே இதைவிட விசேஷமானதாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications