ராஜௌலி எனும் இந்த இடம் பசுமையான இயற்கைக்காட்சிகள் நிரம்பிய சிறு மலைகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. வளமான இயற்கை அழகை இப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம். ராஜௌலி பாஸ் எனும் முக்கியமான மலைப்பாதை இந்த இடம் வழியாக செல்கிறது.
இது ராஜௌலி மலைத்தொடரை தாண்டி ஒரு பரந்த சாலைக்கு இட்டுச்சென்று அதன் வழியாக சோட்டா நாக்பூர் சமவெளிப்பகுதியில் சென்று முடிகிறது. இந்த சமவெளிப்பகுதியும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு எழிற்பிரதேசமாகும்.
இங்கிருந்து கோடர்மா மற்றும் ஜூம்ரி டலியா போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்யலாம். ஹசாரிபாக் மற்றும் ராஞ்சி போன்ற இதர சுற்றுலா நகரங்களுக்கும் இங்கிருந்து செல்ல முடியும்.



Click it and Unblock the Notifications