பாபா பல்ராஜ் கோயில் எனப்படும் இந்த கோயில் புகழ் பெற்ற குரு பாபா ராஜ் தேவ் என்பவரின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது. இவர் 16 ம் நூற்றாண்டில் இந்த இடத்துக்கு விஜயம் செய்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரது மறைவிற்கு பின்னர் அவரது மகன் 1596ம் ஆண்டு இக்கோயிலை கட்டியுள்ளார். 1534ம் ஆண்டில் ஷெர் ஷா சூரி எனும் மன்னர் ஹுமாயூனுக்கு எதிராக போருக்கு செல்வதற்கு முன் இந்த பாபாவிடம் வந்து ஆசி பெற்று சென்றதாக சொல்லப்படுகிறது.
தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாள் இந்த கோயில் ஸ்தலத்தில் திருவிழா ஒன்று நடத்தப்படுகிறது. அச்சமயம் மல்யுத்தப்போட்டிகள் இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த கோயில் பலாசௌர் எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. இது நவான்ஷாஹர் நகரத்திலிருந்து 18.7 கி.மீ தூரத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications