குருத்வாரா தாஹ்லி சாஹிப் நவான்ஷாஹர் என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா ஷீ குருநானக் தேவ்ஜியின் மகனான பாபா ஷீ சந்த் அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இது ரஹோன் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் தங்கியிருந்த பாபா ஷீ சந்த்ஜி 40 நாட்களுக்கு தியானத்தில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
தாஹ்லி எனப்படும் ஷிஷாம் மரம் ஒன்று இந்த இடத்தில் பாபா அவர்களால் நடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நவான்ஷாஹர் நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் கர்ஹ்ஷங்கர் சாலையில் இந்த பழமையான மரத்தை காணலாம்.



Click it and Unblock the Notifications