நவான்ஷாஹர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ள இந்த சனேஹி கோயில் 1869 மற்றும் 1875ம் ஆண்டுகளில் 18,665 ரூபாய் செலவழித்து கட்டப்பட்டிருக்கிறது.
இதன் உள்ளே ஜெய்பூரிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள மாதா சிந்தாபூர்ணியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு விஜயம் செய்யும் பக்தர்களின் துன்பங்கள் யாவுமே நீங்கிவிடுவதாக ஒரு நம்பிக்கை நிலவிவருகிறது.
சனேஹி சங்கிர்த மண்டல் கமிட்டி எனும் குழு இந்த கோயிலை நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஏழைப்பெண்களுக்கு திருமணம் நடத்திவைக்கும் சேவையும் இந்த கோயில் நிர்வாகம் நிறைவேற்றுகிறது.



Click it and Unblock the Notifications