இந்த அட்டல மண்டபம் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. நுணுக்கமான கற்சிற்ப வடிப்புகளுக்கு இது புகழ் பெற்று விளங்குகிறது. அட்டல மண்டபம் என்றால் கண்ணாடி மண்டபம் என்பது பொருளாகும்.
பெயருக்கேற்றபடி இம்மண்டபம் முழுவதும் கண்ணாடிகளால் நிரம்பியிருப்பது பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் ஒரு கலையம்சமாகும். இவை பொருத்தப்பட்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னும் இந்த கண்ணாடிகள் துல்லியமான பிம்பத்தை பிரதிபலிப்பது ஒரு ஆச்சரியமான விசேஷமாகும்.
அட்டல மண்டபம் மற்றொரு காரணத்துக்காகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அதாவது ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி வீற்றிருக்கும் கூடமும் இதுவே ஆகும். இந்த மண்டபத்தில்தான் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி பூஜிக்கப்படுகிறார். இந்த அட்டல மண்டபத்தில் காணப்படும் கண்ணாடிகள் பக்தர்களையும் பார்வையாளர்களையும் பெரிதும் கவர்கின்றன.



Click it and Unblock the Notifications