Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நெல்லூர் » ஈர்க்கும் இடங்கள் » புலிகாட் ஏரி

புலிகாட் ஏரி, நெல்லூர்

21

பல அரிய புலம்பெயர் பறவைகள் விஜயம் செய்து வசிக்கும் பறவைகள் சரணாலயமாகவும் விளங்கும் இந்த புலிகாட் ஏரி அல்லது பழவேற்காடு ஏரி 350 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

இந்த ஏரியின் ஒரு பகுதி தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னைக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது. ஒரிசாவில் உள்ள சில்கா ஏரிக்கு அடுத்தபடியாக இது இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய உப்பங்கழி ஏரியாகும்.

இந்த ஏரி ஒரு சிறிய நிலப்பரப்பான ஸ்ரீ ஹரிகோட்டா தீவினால் வங்களா விரிகுடாக்கடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. அமைதியும் தனிமையும் சூழ்ந்த பிரதேசம் மற்றும் பறவைகள் அதிக காணப்படும் ஏரிப்பகுதி என்பதால் இது ஒரு பிரசித்தமான பிக்னிக் பிரதேசமாக பயணிகளால் விரும்பப்படுகிறது.

புலம்பெயர் பறவைகளை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பறவை ஆர்வலர்களும் இந்த ஏரிப்பகுதிக்கு விஜயம் செய்கின்றனர். இந்த ஏரியில் படகுச்சவாரி செல்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

மீனவர்களால் இயக்கப்படும் இந்த படகுகளில் 500 ரூபாய் செலவில் படகுச்சவாரி செல்லலாம். இருப்பினும் பயணிகள் பாதுகாப்பு அம்சங்களை தங்கள் சொந்தப்பொறுப்பில் உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்தது.

நீர்க்கோழி, சாம்பல்நாரை, கரண்டிவாயன், மீன்கொத்தி, கூழைக்கடா எனும் பெருங்கொக்கு மற்றும் செந்நாரை போன்றவை இங்கு அதிகமாக காணப்படும் சில பறவைகளாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri