சோமசைலம் அல்லது சோமசீலம் என்றழைக்கப்படும் இந்த இடம் நெல்லூரிலிருந்து சற்று தள்ளி அத்ருபள்ளி எனும் ஊரிலிருந்து பொடலாக்கூர் எனுமிடத்திற்கு செல்லும் பாதையில் உள்ளது.
இந்த சோமசைலம் ஸ்தலத்திற்கு செல்லும் சாலை பயணத்துக்கு ஏற்றவாறு நல்ல நிலையில் காணப்படுகிறது. இங்குள்ள ஒரு அணைத்தேக்கத்திற்காக சோமசீலம் புகழ் பெற்றுள்ளது. மேலும் சோமசீலத்திற்கு செல்லும் வழியில் சுமார் 15 அழகிய கிராமங்களும் காணப்படுகின்றன.
இவற்றிற்கு விஜயம் செய்து கிராம எழிலை ரசிப்பதும் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். ஷேர் ஆட்டோ மூலம் இந்த கிராமங்களுக்குள் செல்லலாம். சோமசீலம் அணைப்பகுதியை ஒட்டி காணப்படும் மலைகளில் மலையேற்றத்திலும் பயணிகள் ஈடுபடலாம்.
இயற்கை அழகோடு காட்சியளிக்கும் இந்த அணைப்பகுதிக்கு பிக்னிக் சிற்றுலாவாக ஏராளமான பயணிகள் விஜயம் செய்கின்றனர். சோமசீலாவுக்கு செல்லும் சாலை ஆளரவமற்று தனிமையாக காட்சியளித்தாலும் பயணிப்பதற்கு ஏற்ற ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications