Search
  • Follow NativePlanet
Share
» »சபரிமலை செல்லும் தமிழ் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உங்களுக்கு உதவ 24 மணிநேர ஹெல்ப்லைன்!

சபரிமலை செல்லும் தமிழ் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உங்களுக்கு உதவ 24 மணிநேர ஹெல்ப்லைன்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, தினமும் பூஜைகள் செய்து, கடுமையான விரதமிருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல விஷயங்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏற்கனேவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இப்போது அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது.


நடை திறக்கப்பட்ட முதல் நாளே சபரிமலையை முற்றுகையிட்ட பக்தர்கள்

கார்த்திகை மாதம் மட்டுமே அனைத்து நாட்களிலும் நடை திறந்து இருக்கும். மீதி எல்லா மாதங்களிலும் மாதாந்திர பூஜைக்காக ஒரு சில நாட்களே நடை திறக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் சாற்றப்படும். மண்டல பூஜை மற்றும் மகர ஜோதிக்காக திறக்கப்பட்டிருக்கும் கோவிலில் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை வருவதற்கு முன்னரே பல பக்தர்கள் மாலை போட்டு கொள்வார்கள்,சரியாக கார்த்திகை 1 அன்று அய்யனை காண வேண்டுமென்று, பெரும்பாலான பக்தர்கள் கார்த்திகை 1 அன்று மாலை போட்டு மகரஜோதியன்று அய்யனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக நவம்பர் 15 அன்று சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கியது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்னும் கோஷம் விண்ணையும் மண்ணையும் அதிர வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

Sabarimala
சபரிமலை சுவாமி தரிசன டிக்கெட் புக்கிங்

சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் முன் பதிவு செய்வது அவசியம். https://sabarimalaonline.org/#/login என்ற இணையத்தளத்தில் நீங்கள் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். இதற்காக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் எதாவது ஒன்றின் ஒரிஜினல் கையில் வைத்திருக்க வேண்டும்.


தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

தமிழக அரசு பேருந்து கழகம் சார்பில் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மதுரை, திருச்சி, கோவை, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் யாவும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை நாள்தோறும் இயக்கப்படும். அதே போல, இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை வரை நாள்தோறும், இரவு 8 மணிக்கு மதுரையிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக பம்பைக்கும், மாலை 5.30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து கடலூர், நெய்வேலி டவுன்சிப், விருதாச்சாலம், பெண்ணாடம், திட்டக்குடி வழியாக பம்பைக்கும், இரவு 9 மணிக்கு திருச்சியிலிருந்து திண்டுக்கல், தேனி வழியாக பம்பைக்கும் அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Sabarimala
தமிழக பக்தர்களுக்காக சிறப்பு ஹெல்ப்லைன்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை (நவம்பர் 15 முதல் டிசம்பர் 26, 2024 வரை) மற்றும் மகர விளக்கு திருவிழா (டிசம்பர் 30, 2024, ஜனவரி 30 முதல் ஜனவரி வரை) உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களை உள்ளடக்கிய இந்த சேவையானது சென்னையில் உள்ள துறையின் தலைமையகத்தில் இருந்து இயங்குகிறது.


இந்த எண்களை தொடர்பு கொள்ளவும்

பக்தர்கள், 1800-425-1757 மற்றும் 044-2833-9999 என்ற கட்டணமில்லா எண்கள் மூலம் பயணம், கோயில் நடைமுறைகள் மற்றும் பிற தொடர்புடைய கேள்விகளுக்கு உதவி பெறலாம். தமிழ்நாட்டிலிருந்து வரும் பக்தர்களுக்கு ஒரு சுமூகமான யாத்திரை அனுபவத்தை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் யாவரும் உதவி தேவைப்படும் பட்சத்தில் தயங்காமல் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிரார்கள்!

More News

    Read more about: sabarimala kerala tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+