Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய ரயில்வேயின் ‘ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட்

இந்திய ரயில்வேயின் ‘ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட்

'ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட்' என்பதன் மூலம் நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் நம் நாட்டின் உள்நாட்டு, சிறப்பு தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்ளூர் நெசவாளர்களின் கைத்தறிகள், பழங்குடியினரால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள், உலகப் புகழ்பெற்ற மர வேலைப்பாடு, கைவினைப்பொருட்கள், மசாலா பொருட்கள், தேநீர், காபி, சாக்லேட்டுகள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவை நாட்டின் பல ரயில்வே நிலையங்களில் காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது.

onestationoneproduct1

ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட் என்றால் என்ன?

இந்தத் திட்டம் நடப்பு நிதியாண்டின் யூனியன் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு திட்டமாகும். இது ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் ஒரு விளம்பர மையமாக மாற்றுவதையும், உள்ளூர் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளூரில் உள்ள பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும், உள்ளூர் மக்களின் கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இது முதன் முதலில் மார்ச் 25 ஆம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு கலம்கரி சேலைகள், உள்ளூர் பொம்மைகள், திண்பண்டங்கள் ஆகிவை விற்பனைக்கு வைக்கப்பட்டன.

onestationoneproduct2

ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட் - தமிழ்நாடு

நாடெங்கிலும் நடந்து கொண்டிருக்கும் இந்த ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட் தமிழ்நாட்டிலும் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு நிலையங்களில் பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி நிலையத்தில் கடலைமிட்டாய், பழனி நிலையத்தில் பஞ்சாமிர்தம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நிலையத்தில் பால்கோவா, விருத்தாச்சலம் நிலையத்தில் பல்வேறு மண் பாண்டங்கள், மதுரையில் சுங்குடி காட்டன் புடவைகள் போன்றவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதன் சமீப நடவடிக்கை

யாக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இன்று நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகளும், பித்தளை பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அருகே உள்ள பிரபலமான ரயில் நிலையத்தை அணுகி அங்கே கிடைக்கின்ற பொருட்களை வாங்கி மகிழ்ந்திடுங்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+