• Follow NativePlanet
Share
» »புதுச்சேரியில இன்னும் இரண்டு மாசத்தில மினி ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் தயார் – அனைவரும் பயன்பெறலாம்!

புதுச்சேரியில இன்னும் இரண்டு மாசத்தில மினி ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் தயார் – அனைவரும் பயன்பெறலாம்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.12.19 கோடி மதிப்பீட்டில் அண்ணா திடலில் மினி விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது. பல்வேறு அரசு பள்ளி மாணவ மாணவிகளும் இலவசமாக பயன்பெறும் வகையில், புதுவை அண்ணா திடலில் பல வசதிகள் அடங்கிய மினி ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. 2021 ஜனவரியில் பணிகள் தொடங்கி, அண்ணாசாலையை எதிர்கொண்டிருந்த கடைகள் இடிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. புதுவை மக்களுக்கு ஒரு நற்செய்தியாக இந்த விளையாட்டு அரங்கம் இன்னும் 2 மாதங்களில் இந்த விளையாட்டு அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது!

புதுச்சேரிஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா மினி ஸ்டேடியம்

புதுவை முதல்வராக திரு. நாராயணசாமி அவர்கள் இருந்த போது புதுவை அண்ணா திடலில் விளையாட்டு அரங்கம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வி.நாராயணசாமி முதலமைச்சராக இருந்தபோது ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. 2021 ஜனவரியில் பணிகள் தொடங்கி, அண்ணாசாலையை எதிர்கொண்டிருந்த கடைகள் இடிக்கப்பட்டது. 'ஸ்மார் சிட்டி' திட்டத்தில், தொடங்கி மூன்றரை ஆண்டுகளாகியுள்ள நிலையில், இன்னும் 2 மாதங்களில் அண்ணா திடல் மினிவிளையாட்டு அரங்க கட்டுமான பணியை நிறைவு செய்வோம் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ரூ.12 கோடியே 19 லட்சம் செலவில் மினி விளையாட்டு அரங்கம்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுச்சேரி அண்ணா திடலில் ரூ.12 கோடியே 19 லட்சம் செலவில் மினி விளையாட்டு அரங்கம் கட்டும் பணி கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அண்ணா திடலைச் சுற்றி 179 நகராட்சி கடைகள் இருந்தன. அவை அகற்றப்பட்டன. கட்டிடப் பணியைத் தொடங்கும் போது, 'கட்டுமான பணி முடிந்ததும், ஏற்கெனவே இருப்பவர்களுக்கே புதிய கடைகள் தருவோம்' என்றதால் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்தனர்.

annaministadium

மந்தமாக நடைபெற்று வந்த பணிகள்

பவுல்வர்டில் உள்ள அண்ணா திடலில் மினி ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் கட்டும் பணி மந்தகதியில் நடந்து வருவது விளையாட்டு வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு வி.நாராயணசாமி முதலமைச்சராக இருந்தபோது ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. இத்திட்டத்தின் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்த நிலையில், விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக மைதானம் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் 2 மாதங்களில் திறப்புவிழா

இதையடுத்து, அண்ணா திடலில் 14 ஆயிரத்து 435 சதுர மீட்டர் பரப்பளவில் மினி விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற தொடங்கியது. இங்கு விளையாட்டு வீரர்கள் தங்க தனித்தனியே 14 அறைகள், 1,000 பேர் அமரும் வகையில் கேலரி, அலுவலகம், பயிற்சிக் கூடம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, ஒரு கால்பந்து மைதானம், 200 மீ ஓட்டப் பாதை, பெட்டான்க் கோர்ட், உடற்பயிற்சி கூடம் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதி ஆகியவை உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. இப்பணி 2023 ஜூன் மாதம் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் 2 மாதங்களில் திறப்பு விழா காணப் போகிறது.

annaministadium opening

பயன்பெறும் அரசு பள்ளி மாணவ மாணவிகள்

போலிவார்டில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. இதனால், இப்பள்ளி மாணவர்கள், அண்ணா திடலை பயன்படுத்தி வந்தனர். மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தை விரைவில் திறப்பதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சி வசதிகள் கிடைக்கும் என எதிரப்பார்க்கப்படுகிறது.

ஒரு சில பணிகளே உள்ளன

நிதியளவும் நிர்ணயித்த அளவைத் தாண்டிய நிலையில், அதற்கு ஒப்புதல் தரப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. "பூச்சு பணி, மின் இணைப்பு பணி, வர்ணம் அடிப்பது என பல பணிகள் விரைந்து நடந்து வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் பணிகளை முடித்து விடுவோம்" என்று 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கின்றனர்.

More News

    Read more about: puducherry news stadium
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+