Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தின் முக்கிய ரயில் வழித்தடங்களில் சேவைகளை ரத்து செய்த தெற்கு ரயில்வே!

தமிழகத்தின் முக்கிய ரயில் வழித்தடங்களில் சேவைகளை ரத்து செய்த தெற்கு ரயில்வே!

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தின் முக்கிய ரயில் வழித்தடங்களில் ஒன்றான சேலம் வழி ரயில் சேவைகளை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது. சேலம் ரயில் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - சேலம் 5 முக்கிய ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியில் பயணிக்கும் ரயில் பயணிகள் சற்று குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். எதனால் சேவைகள் நிறுத்தப்பட்டது? மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து கீழே காண்போம்!

சேலம் கோவை இடையே பராமரிப்பு பணிகள்

சேலம் கோவை இடையே பராமரிப்பு பணிகள்

சேலத்திலிருந்து கோவைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பயணிகள் சென்று வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் சேலம் மார்க்கமாக பல ரயில்கள் தென் தமிழகத்திற்கு இயக்கப்படுகின்றன. இந்திய ரயில்வே தொந்தரவின்றி மக்களுக்கு பயணத்தை வழங்க பல சேவைகளை செய்து வருவதோடு அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுகிறது. அந்த வகையில் இப்போது சேலம் ரயில் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

கோவை - சேலம், கரூர் - திருச்சி ரயில்கள் ரத்து

கோவை - சேலம், கரூர் - திருச்சி ரயில்கள் ரத்து

அதன்படி பிப். 3 ஆம் தேதி முதல் சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் காரணமாக கோவை - சேலம் இடையே இயக்கப்படும் ரயில் (06802) பிப் 3, 4, 6,10,11,13,17,18, 20, 24, 25, 27 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளது. அடுத்ததாக கரூர் - திருச்சி இடையே பிற்பகல் 3.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் (06882) பிப்ரவரி 14, 21, 28 ஆகிய 3 நாட்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளது.

விருத்தாசலம் – சேலம், பாலக்காடு – திருச்சி, திருச்சி – ஈரோடு ரயில்கள் ரத்து

விருத்தாசலம் – சேலம், பாலக்காடு – திருச்சி, திருச்சி – ஈரோடு ரயில்கள் ரத்து

அதனை தொடர்ந்து விருத்தாசலம் - சேலம் இடையே காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் (06121) பிப். 14, 21, 28 ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் (16844) பிப்ரவரி 14, 21, 28 ஆம் தேதி கரூருடன் நிறுத்தப்படும். அடுத்தாக திருச்சி - ஈரோடு இடையே இயக்கப்படும் ரயிலானது (06809) பிப்ரவரி 14, 21, 28 தேதிகளில் கரூரில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனால் இந்த வழியில் பயணிக்கும் பயணிகள் மேற்கண்ட தேதிகளில் தங்களது பயணத்தை தொடர இயலாது. அதற்கு மாற்றாக அவர்கள் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் எப்பொழுதும் போல ரயில்கள் இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X