Search
  • Follow NativePlanet
Share
» »ரூ.7,927 கோடி மதிப்பில் இந்திய ரயில்வே விரிவாக்கம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.7,927 கோடி மதிப்பில் இந்திய ரயில்வே விரிவாக்கம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) இந்திய இரயில்வேக்காக மொத்தம் ரூ.7,927 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய பல்டிடிராக்கிங் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மொத்த ரயில்வேயும் மாறப்போகிறது என்றே கூறலாம். இணைப்பை மேம்படுத்துதல், தளவாடச் செலவுகளைக் குறைத்தல், எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தல், CO2 உமிழ்வைக் குறைத்தல் மற்றும் இந்திய ரயில்வே முழுவதும் பயண வசதியை மேம்படுத்துதல் ஆகியவை இந்த முயற்சிகளின் நோக்கங்களாகும்!

இந்திய ரயில்வே எனும் பெரிய நிறுவனம்

உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் என்பது நமது இந்தியாவில் செயல்படும் இந்திய ரயில்வே தான், இது மொத்தமாக 132,310-கிலோமீட்டர் பாதையையும், 12,000 மேற்பட்ட ரயில்களையம் இயக்கி, தினமும் இரண்டரை கோடி மக்களுக்கு பலனளித்து வருகின்றது. 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பணியமர்த்தி, இந்தியாவில் இரண்டாவது பெரிய வேலையளிப்பவராகவும் மற்றும் உலகளவில் ஒன்பதாவது பெரிய முதலாளியாக உள்ளது.

Indian Railways

ரயில் நெட் வொர்க்கின் தரம் மேம்படுத்த முயற்சி

ரயில்களின் தரத்தை மேம்படுத்தவும், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும் இந்திய ரயில்வே அவ்வப்போது பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அறிக்கையின்படி, இந்த மல்டி-டிராக்கிங் முயற்சிகள் மும்பை மற்றும் பிரயாக்ராஜை இணைக்கும் சில பரபரப்பான வழித்தடங்களில் ரயில் செயல்பாடுகளை எளிதாக்குவதையும், நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த விரிவாக்கம் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும், ரயில்வே நெட்வொர்க்கின் செயல்திறனை மேம்படுத்தும்.

பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்

உள்ளூர் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சுயவேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விரிவான பிராந்திய வளர்ச்சியில் கவனம் செலுத்தும் "புதிய இந்தியா" என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்துடன் இத்திட்டங்கள் இணைந்துள்ளன. இந்தத் திட்டங்கள் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, இணைப்பை மேம்படுத்தவும், அவர்களை மேலும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Railways

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம்

இந்த மூன்று ரயில்வே திட்டங்களும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களில் பரவி, இந்திய ரயில்வே நெட்வொர்க்கை சுமார் 639 கிலோமீட்டர் வரை விரிவுபடுத்தும். முக்கிய நகரங்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதுடன், இந்த திட்டங்கள் கந்த்வா மற்றும் சித்ரகூட் ஆகிய இரு ஆர்வமுள்ள மாவட்டங்களுக்கான அணுகலை மேம்படுத்தும், இதன் மூலம் சுமார் 1,319 கிராமங்கள் மற்றும் 38 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

முக்கிய இந்து கோயில்கள் இணைப்பு

மும்பை-பிரயாக்ராஜ்-வாரணாசி வழித்தடத்தில் அதிக பயணிகள் ரயில்களை இயக்குவதன் மூலம், நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வர், கந்த்வாவில் உள்ள ஓம்காரேஷ்வர், மற்றும் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் போன்ற புனித ஜோதிர்லிங்கத் தலங்கள் இணைக்கப்படும். அதுமட்டுமல்ல, பிரயாக்ராஜ்,கயா மற்றும் ஷீரடி சித்ரகோட்டில் உள்ள புனித தலங்களுக்கு செல்லும் பக்கதர்களும் இதனால் பயனடைவார்கள். இந்த முயற்சி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களில் பரவும்.

பாரம்பரிய சுற்றுலாத் தலங்களையும் இணைக்க முயற்சி

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களான கஜுராஹோ மற்றும் அஜந்தா மற்றும் எல்லோரா போன்ற முக்கிய இடங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் இந்த திட்டங்கள் சுற்றுலாவை மேம்படுத்துவதாகும். பூர்வா நீர்வீழ்ச்சி, கியோட்டி நீர்வீழ்ச்சி மற்றும் யாவல் வனவிலங்கு சரணாலயம் போன்ற இயற்கை அழகுகளுடன், தேவகிரி கோட்டை, ஆசிர்கர் கோட்டை மற்றும் ரேவா கோட்டை போன்ற வரலாற்று இடங்களையும் கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கை

இந்தத் திட்டங்களின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், நிலக்கரி, எஃகு, சிமென்ட், உரங்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் கொள்கலன்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து இந்த வழித்தடங்களை நம்பியுள்ளது. சரக்கு போக்குவரத்தை ஆண்டுக்கு 51 மில்லியன் டன்கள் அதிகரிப்பதன் மூலம், ரயில் திறனை நீட்டிப்பது தளவாடச் செலவுகளைக் குறைத்து சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஆற்றல் திறன் கொண்டவையாக இருப்பதால், 11 கோடி மரங்களை நடுவதற்கு சமமான CO2 உமிழ்வை 271 கோடி கிலோ குறைப்பதன் மூலம் காலநிலை இலக்குகளை அடைய ரயில்வே உதவக்கூடும்.

More News

    Read more about: indian railways irctc news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+