Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் முக்கிய வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை ரத்து - கூடுதலாக இயக்கப்படும் MTC பேருந்துகள்!

சென்னையின் முக்கிய வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை ரத்து - கூடுதலாக இயக்கப்படும் MTC பேருந்துகள்!

சென்னையின் புறநகர் சேவை என்பது சாதாரண ரயில் சேவை மட்டுமல்ல, பெரும்பாலான சென்னை மக்களின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களையும் மலிவான கட்டணத்தில் இணைக்கும் மின்சார ரயில் சேவை வேலைக்கு செல்வோர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவர்க்கும் பயனாக உள்ளது. இந்நிலையில் சென்னை பீச்-செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க கூடுதல் MTC பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன!

Chennai suburban electric trains News

சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணிகள்

சென்னை மக்கள் பெரிதும் பயன்படுத்தும் மின்சார ரயில் சேவையில், பாதுகாப்பு கருதி அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் முழுமையாக அல்லது பகுதியாக மின்சார ரயில் ரத்து செய்யப்படும். சில நேரங்களில் வழித்தடங்கள் மாற்றி இயக்கப்படும். இந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்வதன் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

மொத்தமாக 28 மின்சார ரயில்கள் நிறுத்தம்

சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, கடற்கரை - திருமால்பூர் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Chennai suburban electric trains News

15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும்

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் இயக்கப்படும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் வகையில் மின்சார ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய நேர அட்டவணை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பேருந்துகளில் வழக்கத்தை விட அதிகம் கூட்டம் காணப்படுகிறது.

சென்னை பீச்-தாம்பரம் ரயில் சேவை ரத்து

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு காலை 6.52, 7.33, 8.43, 9.40, முற்பகல் 11.30,11.41, 12.30, 12.50, பிற்பகல் 3.15, மாலை 4.25, 5.43, 6.35, இரவு 7.57,8.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு காலை 5.12, 6.03, 7.17, 8.19, 9.00, 10.40, முற்பகல் 11.30, 11.40, மதியம் 1.40, பிற்பகல் 2.57, மாலை 4.15, 5.10, 6.26 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கூடுதலாக இயக்கப்படும் MTC பேருந்துகள்

சென்னையில் குறிப்பிட்ட வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிராட்வேயில் இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதே போல தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.

பொதுமக்கள் இந்த தகவலை அறிந்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+