Search
  • Follow NativePlanet
Share
» »புதுச்சேரியில் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் – ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் ரூல்!

புதுச்சேரியில் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் – ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் ரூல்!

நாளுக்கு நாள் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்ட வருகிறது. இதற்கு புதுவை யூனியன் பிரதேசமும் விதிவிலக்கு அல்ல. இந்தியாவின் அனேக இடங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப் பட்டாலும் கூட புதுவையில் இன்னமும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. பலமுறை இது தொடர்பாக விதிகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், புதுவையில் ஹெல்மெட் இல்லாமலே வாகனம் ஓட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜனவரி 1 2025 முதல் புதுவையில் இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

Helmet

அதிகரித்து வரும் புதுவை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

புதுச்சேரி அதன் காலனித்துவ கட்டிடக்கலை முதல் அழகிய உப்பங்கழிகள் மற்றும் கிரியோல் உணவு வகைகள், துடிப்பான பப்கள், பார்ட்டிகள் வரை துடிப்பான சாயல்களில் நம்மை ஈர்க்கும் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியான, அழகான சோலையாக காட்சியளிக்கிறது. இதனால் வார இறுதிகளிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அடிக்கடி புதுவையில் இரு சக்கர வாகனங்களினால் ஏற்படும் விபத்துக்களும் அதிகமாகி வருகின்றன. அதனால் புதுவையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள்

இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்கக் கூடாது, வேகமாக வாகனங்களை ஓட்டக் கூடாது, மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் அனைத்துப் பகுதிகளிலும் சாலை விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், புதுச்சேரியில் 2025 புத்தாண்டு ஜனவரி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை சரியாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

புதுவையில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை

புதுச்சேரியில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, புதுச்சேரியில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2020 இல் 969 ஆக இருந்தது, 2021 இல் 1,049 ஆகவும், மேலும் 2022 இல் 1,181 ஆகவும் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 154 விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 85.7% பேர் ஆண்கள் என்றும், மழைக்காலத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Helmet

புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம்

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதுச்சேரி போலீசார், போக்குவரத்து விபத்து விபரங்களை சேகரித்து, ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் வருடாந்திர போக்குவரத்து விபத்து அறிக்கை, இப்பகுதியில் சாலை விபத்துகளின் காரணங்கள் மற்றும் வடிவங்கள் பற்றிய விரிவான நுண்ணறிவுகளை வழங்குகிறது. இந்தப் போக்கைக் குறைப்பதற்கான முயற்சிகளில் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவை அடங்கும். இவற்றுள் புதுவையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு தற்போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

புதுச்சேரி மாநிலத்தில் 2017 இல் டூவீலரில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பின்னர் வாபஸ் பெறப்பட்டது. கடந்த 2022 நவம்பரில் மீண்டும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டது. ஹெல்மெட் இன்றி பயணித்தால் ரூ.1000 அபராதம், 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அபராதம் விதிப்பதை நிறுத்திவிட்டனர். இந்நிலையில், வருகிற 2025 ஜனவரி 1 முதல் ஹெல்மெட் கட்டாயமாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

More News

    Read more about: puducherry news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+