Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய இரயில்வே தனது முதல் சர்வதேச இரயில் இணைப்பைத் தொடங்குகிறது – எந்த நாட்டுடன் தெரியுமா?

இந்திய இரயில்வே தனது முதல் சர்வதேச இரயில் இணைப்பைத் தொடங்குகிறது – எந்த நாட்டுடன் தெரியுமா?

நமது அண்டை நாடான பூடான் விசா இல்லாமல் இந்தியர்கள் சுற்றுலா செல்லக்கூடிய அனுமதி வழங்கும் நாடுகளில் ஒன்று. இமயமலையின் சாரலில், மிதமான வானிலை, அழகிய சுற்றுலாத் தலங்கள், பனி மூடிய சிகரங்கள், கலாச்சாரம் என நம்மை வரவேற்கும் அழகிய நாடான பூட்டானை இனி நாம் ரயிலில் சென்று சுற்றிப் பார்க்கலாம் தெரியுமா?

இந்தியாவுடன் நல்லுறவில் இருக்கும் பூடான்

ஆதி காலத்தில் இருந்தே இந்தியாவுடன் நல்லுறவு கொண்டுள்ள பூடான், சுற்றுலா, வர்த்தகம், படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணிகளில் இருதரப்பு உறவுகளை வலுவாக கொண்டுள்ளது. இந்திய பூட்டான் இருதரப்பு உறவுகளின் அடிப்படை கட்டமைப்பு 1949 இல் கையெழுத்திடப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில் இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையில் சர்வதேச ரயில் சேவை துவங்கப்படவுள்ளது.

1

இந்தியாவின் முதல் சர்வதேச ரயில் இணைப்பு

இரு நாடுகளும் ஒன்றோடொன்று இணைக்கும் ரயில் இணைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த ரயில் இணைப்பு இரு நாடுகளின் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்தும். இந்த குறிப்பிட்ட ரயில் இணைப்பு பூடானை இந்தியாவுடன் இணைக்கும் முதல் ரயில் இணைப்பு ஆகும்.

அசாமின் கோக்ரஜாரில் இருந்து பூட்டானின் கெலேபுவிற்கு செல்லும் ரயில்

அசாமின் கோக்ரஜார் மற்றும் பூட்டானின் கெலேபு இடையே ரயில் இணைப்பு அமைப்பது தொடர்பாக இந்தியா மற்றும் பூடான் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் வெளிப்படுத்தினார். இந்த சாத்தியமான ரயில்வே இணைப்பு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வாக்குறுதியைக் கொண்டுள்ளது.

இரு நாடுகளிலும் உள்ள அழகிய சுற்றுலாத் தலங்கள்

இருநாடுகளிலும் உள்ள கலாச்சார, ஆன்மீக, இயற்கை சுற்றுலாத் தலங்கள் உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்தியாவின் கோவில்கள், அரண்மனைகள், இயற்கை அதியங்களை காண பூடானில் இருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இந்தியாவிலிருந்து பூடானுக்கு சென்று மடாலயங்கள், பனி மூடிய சிகரங்கள், ஆன்மீக சுற்றுலாத் தலங்களைக் காண இந்தியர்கள் செல்கின்றனர்.

2

எப்போது ரயில் சேவை துவங்கும்

இந்த ரயில் இணைப்பு பூட்டானில் உள்ள கெலேபு மற்றும் இந்தியாவின் அசாமில் உள்ள கோக்ரஜார் இடையே இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த 57 கிமீ ரயில் பாதையின் கட்டுமானம் 2026 க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானம் முடிவடைந்த பின்னர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு இரு நாடுகளுக்கிடையே ரயில் சேவைகள் துவங்கப்படும். சுற்றுலா வளர்ச்சி இரு நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எல்லை உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பிறகு முக்கியத்துவம் அளிக்கும் அரசு

2014 ஆம் ஆண்டு முதல் எல்லை உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு மேம்பாட்டிற்கு மோடி அரசு முக்கியத்துவம் அளித்து வருவதை அமைச்சர் மேலும் எடுத்துரைத்தார். வங்காளதேசத்துடனான இணைப்பு முயற்சிகள் குறித்தும் நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. வங்காளதேசத்தில் சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களை செயல்படுத்துவது வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு பொருளாதார ரீதியாக பெரிதும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியா, மியான்மர், தாய்லாந்து இடையே முத்தரப்பு சாலை

செயல்பாட்டு பேருந்து சேவைகள், எல்லை தாண்டிய பயணிகள் ரயில் சேவைகள் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் போன்ற மக்களிடையேயான தொடர்புகளை எளிதாக்கும். இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய லட்சிய முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான முயற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+